2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

மீண்டும் காயம்… பாதியில் வெளியேறிய மதீஷ பத்திரண

விளையாட்டுMay 17, 2026 · 3 months முன்3

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, தனது முதலாவது போட்டியிலேயே மீண்டும் காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போதே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் (Calf) காயம் காரணமாக, இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் விளையாடாத மதீஷ பத்திரணவை, கொல்கத்தா அணி ஏலத்தில் 18 கோடி ரூபாய் என்ற இமாலயத் தொகைக்கு வாங்கியிருந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகக் களமிறங்கிய அவர், வெறும் 8 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் இடது கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் மைதானத்தை விட்டு வெளியேறினார்.