2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்1
இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக, இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, “திட்வா” சூறாவளியால் இலங்கை பாதிக்கப்பட்ட போது முதல் நாடாக விரைந்து வந்து இந்தியா வழங்கிய உதவிகளையும், “சாகர் பந்து” நடவடிக்கையையும் பாராட்டி, மீட்பு பணிகளின் அடுத்த கட்டத்திலும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.