2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

மருந்துத் தட்டுப்பாட்டால் முடங்கும் அபாயத்தில் சுகாதாரத் துறை : மருந்து உற்பத்தித் துறைச் சபை அவசர எச்சரிக்கை!

உள்ளூர்April 23, 2026 · 4 months முன்2
மருந்துத் தட்டுப்பாட்டால் முடங்கும் அபாயத்தில் சுகாதாரத் துறை : மருந்து உற்பத்தித் துறைச் சபை அவசர எச்சரிக்கை!

இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக மருந்து உற்பத்தித் துறைச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நெருக்கடியைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க வேண்டும் என அச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

உலகளாவிய ரீதியில் மருந்து விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் எரிபொருள், கப்பல் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளமையால் விநியோகச் சங்கிலி பாதிப்படைந்துள்ளதாகவும், ரூபாயின் பெறுமதி மற்றும் இறக்குமதி செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மருந்து இறக்குமதியைப் பாதித்துள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள், மருந்து விநியோகத்தின் போது ஏற்படும் மேலதிக வரி மற்றும் சுத்திகரிப்புச் செலவுகள் அதிகரிப்பு என்பன மருந்து நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு துறையின் பிரச்சினை மட்டுமல்ல, முழு நாட்டு மக்களினதும் ஆரோக்கியம் சார்ந்த தேசியப் பிரச்சினையாகும்.

எனவே, பாதுகாப்பான மற்றும் தரமான மருந்துகள் தட்டுப்பாடின்றி நோயாளிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய உரிய தரப்பினர் ஒத்துழைக்க வேண்டியதுடன், அதிகாரிகள் உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.