2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ☀️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சித்திரை புத்தாண்டு சுபவேளை : இன்று மரக்கன்றுகளை நாட்டுவதற்கான நேரம் ஆரம்பம்!

உள்ளூர்April 23, 2026 · 6 months முன்4
சித்திரை புத்தாண்டு சுபவேளை : இன்று மரக்கன்றுகளை நாட்டுவதற்கான நேரம் ஆரம்பம்!

சித்திரை புத்தாண்டு சுபநேர அட்டவணைக்கு அமைவாக, மரக்கன்றுகளை நாட்டுவதற்கான சுபவேளை இன்று ஆரம்பமாகியுள்ளது.புத்தாண்டு சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக, இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மரக்கன்று நடுகைக்கான சடங்கு இன்றைய நாளில் மேற்கொள்ளப்படுகின்றது.

பாரம்பரிய பஞ்சாங்கத்தின்படி, இந்த நற்காரியத்தில் ஈடுபடுவோர் பொன்னிற ஆடை அணிந்து வடக்கு திசையை நோக்கி நின்று மரக்கன்றுகளை நடுதல் வேண்டும்.சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கும், எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான சூழலை உருவாக்குவதற்கும் இவ்வாறான பாரம்பரிய நடைமுறைகள் ஊக்கமளிக்கின்றன.

நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் இந்த சுபவேளையில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் இச் சம்பிரதாயத்தை முன்னெடுத்து வருகின்றனர்.