2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

தலைமுடி வளர வீட்டிலேயே மூலிகை ஷாம்பு தயாரிப்பது எப்படி?

ஆரோக்கியம்September 3, 2025 · 12 months முன்3
தலைமுடி வளர வீட்டிலேயே மூலிகை ஷாம்பு தயாரிப்பது எப்படி?

கடைகளில் விற்கப்படும் ஷாம்பூக்களில் அதிகளவு இரசாயனங்கள் கலக்கப்படுவதால் முடிஉதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.

இயற்கை முறையிலான ஷாம்பூவை பயன்படுத்தினால் மட்டுமே முடி உதிர்வு நிரந்தரமாக நீங்கும்.

அந்தவகையில், வீட்டிலேயே தலைமுடி அடர்த்தியாக வளர மூலிகை ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர்- 1½ கப்

ரீத்தா பொடி- 6 ஸ்பூன்

சீயக்காய் பொடி- 6 ஸ்பூன்

நெல்லிக்காய் பொடி- 6 ஸ்பூன்

கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

ஆளி விதைகள்- ½ கப்

செம்பருத்தி பூ பொடி- 4 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ரீத்தா, சீகக்காய் மற்றும் நெல்லிக்காய் பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

பின் கொதிக்கின்ற தண்ணீரில் ஆளி விதைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து இப்போது செம்பருத்தி பூ பொடியை எடுத்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு கலக்கவேண்டும்.

இதற்கடுத்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனையுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து ஆறியதும் இவையனைத்தையும் வடிகட்டவும்.