2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

உள்ளூர்April 6, 2026 · 4 months முன்1
அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய இன்று காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியிருந்தது. 

இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று அறிவித்திருந்தார். 

உலக சுகாதார அமைப்பின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகத் தாம் இன்று இந்தியா புறப்படவுள்ளதாகவும், மீண்டும் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் நேற்று அத தெரண செய்திகளுக்கு தெரிவித்தார். 

இதனையடுத்து தமது சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.