2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பதின்ம வயது கர்ப்ப சம்பவங்கள் தொடர்பில் 44 முறைப்பாடுகள்

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்0
பதின்ம வயது கர்ப்ப சம்பவங்கள் தொடர்பில் 44 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் (ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை) பதின்ம வயது கர்ப்ப சம்பவங்கள் தொடர்பாக 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மொத்தம் 5,461 சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவற்றில் 4,501 முறைப்பாடுகள் சட்டத்துடன் தொடர்புடையவை எனவும், 960 முறைப்பாடுகள் சட்டத்துடன் தொடர்பற்றவை எனவும் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில், சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 141 முறைப்பாடுகள், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 330 முறைப்பாடுகள் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 32 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், அதிகபட்சமாக சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,126 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளது எனவும், மேலும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 125 முறைப்பாடுகள் மற்றும் சிறுவர் தொழிலாளர் தொடர்பாக 82 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே காலப்பகுதியில், சிறுவர்களுக்கு எதிரான இணைய மிரட்டல் தொடர்பாக 81 முறைப்பாடுகள், தற்கொலை தொடர்பாக 10 முறைப்பாடுகள், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 63 முறைப்பாடுகள், குழந்தைத் திருமணம் தொடர்பாக 3 முறைப்பாடுகள் மற்றும் கருக்கலைப்பு தொடர்பாக 1 முறைப்பாடு பெறப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.