2026 September 29, Tuesday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.மத்திய மாகாண லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்.நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிரிஷ் வழக்கு விசாரணை.இலங்கை சார்பில் தேசிய உரையாற்றவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்.யோஷித ராஜபக்ஷ தொடர்பான நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3க்கு ஒத்திவைப்பு.செப்டம்பர் 28 நடைபெறவிருந்த மஹாபொல விழா புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்திவைப்பு.மத்திய கிழக்கு பதற்றத்தால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை அதிகாரி உயிரிழந்த நிலையில் மீட்பு!

BREAKINGஉள்ளூர்May 8, 2026 · 5 months முன்12
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை அதிகாரி உயிரிழந்த நிலையில் மீட்பு!

சந்தேகத்திற்குரிய வகையில் மரணமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் ஊழல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த கபில சந்திரசேனவை, மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது