2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

பாதிக்கப்பட்டுள்ள மின் பாவனையாளர்களுக்கான விசேட செய்தி

உள்ளூர்December 2, 2025 · 9 months முன்2
பாதிக்கப்பட்டுள்ள மின் பாவனையாளர்களுக்கான விசேட செய்தி

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் பொறியியலாளர் ஷெர்லி குமார அறிவித்துள்ளார்.

மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், செலுத்தப்பட வேண்டிய கட்டணம் அடுத்த மாதங்களில் உரிய கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப் பட்டியல்கள் விநியோகிப்பது சாத்தியமில்லை என்று சுட்டிக்காட்டிய அவர் அந்தக் கட்டணப் பட்டியல்கள் அடுத்த மாதங்களில் பாவனையாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.