2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பிக்குகள் மூலம் போதைப்பொருள் கடத்தல்: விசாரணை தீவிரம்!

உள்ளூர்May 12, 2026 · 5 months முன்3
பிக்குகள் மூலம் போதைப்பொருள் கடத்தல்: விசாரணை தீவிரம்!

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பிய போது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘அமிதானந்த’ என்ற பிக்கு ஒருவரே இந்த சட்டவிரோத செயலை வழிநடத்தியுள்ளமை தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து, அமிதானந்த என்ற பிக்குவும் கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.