2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

60 மில்லியன் ரூபா பணம் கைமாறியதா?

உள்ளூர்May 12, 2026 · 3 months முன்2
60 மில்லியன் ரூபா பணம் கைமாறியதா?

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய, இன்று முற்பகல் அங்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுமார் இரண்டரை மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எர்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் அந்த ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே முன்னாள் ஜனாதிபதி இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் டொலர் நிதியை இலஞ்சமாகப் பெற்றதாக, அண்மையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு மூன்று சந்தர்ப்பங்களில் 60 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதாக கபில சந்திரசேன தெரிவித்திருந்ததாககையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு இதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

அதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.