2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

உரிம அட்டைகள் விநியோகம் வேகமடைந்தது!

உள்ளூர்May 27, 2026 · 3 months முன்1
உரிம அட்டைகள் விநியோகம் வேகமடைந்தது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாததால், திணைக்களத்தின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளதாக உள்ளக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பணிப்பாளர் நாயகம் கடந்த மார்ச் இறுதியில் கைது செய்யப்பட்டதை அடுத்து, நிர்வாக நடவடிக்கைகள் மந்தகதியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், சுமார் 10 இலட்சம் வாகன இலக்கத் தகடுகளும், 3 இலட்சம் ஓட்டுநர் உரிமங்களும் விநியோகிக்கப்படாமல் இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இது குறித்து மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக தேசப்பிரிய தெரிவிக்கையில்:

முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமை குறித்து அமைச்சு மட்டத்தில் கொள்கை ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும், அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பும் 14 ‘ஓப்லைன்’ மாவட்ட அலுவலகங்களை, தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு ‘ஒன்லைன்’ மயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இராணுவம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவியுடன் 50% இற்கும் அதிகமான நிலுவை அட்டைகள் அச்சிடப்பட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படுகின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு மில்லியன் அட்டைகள் கிடைக்கவுள்ளன.

அத்துடன், புதிய விநியோகஸ்தர் மூலம் மே 10 முதல் இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நிலுவைகள் அனைத்தும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.