2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்டுகள் மீட்பு

உள்ளூர்January 12, 2026 · 7 months முன்3
ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்டுகள் மீட்பு

சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இரண்டு இலங்கை பயணிகள் இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று (12) அதிகாலை 02.30 மணியளவில் அபுதாபியிலிருந்து (Etihad) விமான சேவைக்கு சொந்தமான EY-394 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளில் (Suitcases) மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் ஒரு இலட்சம் சிகரெட்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது இவர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 14ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இவர்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.