
janani
May 1, 2026
உள்ளூர்
“எங்கள் உரிமை எங்கே?” மேதினத்தில் முத்து நகர் விவசாயிகள் கடும் போராட்டம்!

திருகோணமலை ,பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று கறுப்பாடை அணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் திருகோணமலை கண்டி பிரதான வீதியின் முத்து நகர் சந்தியில் இடம் பெற்றது.
கடந்த பல வருடங்களாக தமது வயல்காணிக்களுக் கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியே இவ் விழிப்புணர்வுப் போராட்டத்தில் இடம்பெற்றது. விவசாய காணிகளை சூரையாடி தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சார உற்பத்திக்காக வழங்கப்பட்டதை கண்டித்து தொழிலாளர் தினத்தை கரிநாளாக மாற்றி போராடினாராகள்.
எமது நிலம் எமக்கு வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், நலிவடைந்த உழவருக்கு Imf நீதி பெற்றுத்தா, முத்து நகர் விவசாய காணிகளை மீள தா போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கமத் தொழிலாளர்களின் விவசாய நிலங்களைப் பெற்றுத்தருமாறு கோரி சுமார் 50 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





