
janani
Jul 30, 2026
உள்ளூர்
இலங்கையின் கடன் தரவரிசையில் முன்னேற்றம்!

இலங்கையின் பொருளாதார நிலை குறித்த ஸ்டேண்டர்ட் எண்ட் பூவர்ஸ் (S&P) சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் புதிய மதிப்பீடு வெளியாகியுள்ளது.
டிட்வா சூறாவளித் தாக்கம் மற்றும் மத்திய கிழக்குப் போர்ச் சூழல் போன்ற வெளிப்புறச் சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் கடன் மதிப்பீட்டை அரசாங்கம் ஸ்திரமான மட்டத்திலேயே பேணி வெற்றி கண்டுள்ளதாகத் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அளவிடும் 'பரிமாற்றம் மற்றும் மாற்றத்தக்க தன்மை' (T&C) மதிப்பீட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் மிக ஆபத்தான 'CCC' மட்டத்தில் இருந்த இலங்கை, 2025 ஆம் ஆண்டில் 'CCC+' ஆக உயர்ந்து, தற்போது 2026 ஆம் ஆண்டில் 'B-' நிலைக்கு முன்னேறியுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தாமலும், பொருளாதாரத்தைச் சுருக்காமலும் மத்திய வங்கியின் மூலோபாயத் தலையீடுகள் மூலமே வெளிநாட்டுக் கையிருப்பு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கடன் வெளிப்படைத்தன்மையில் இலங்கை சர்வதேச அளவில் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதுடன், ஜூலை மாதத்துக்குள் ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கில் 63.5 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





