
janani
Jul 30, 2026
உள்ளூர்
மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து வி#த்து!

நல்லத்தண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மோகினி நீர்வீழ்ச்சிப் பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவத்தில், கண்டி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற இக்கோர விபத்தில் முச்சக்கரவண்டியின் ஓட்டுநரும் உறவினர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மூன்று மாணவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில், வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைப் பெற்று வந்த மாணவி இன்று (30) உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணிப் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





