Search

janani

Mar 27, 2026

தொழில்நுட்பம்

புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் வாட்ஸ்அப்

பயனர்களின் அன்றாட தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அலுவலகப் பணிகளைத் தனித்தனியாக நிர்வகிப்பதற்கும், உரையாடல்களை மெருகூட்டுவதற்கும் இந்த புதிய கருவிகள் உதவும் என வட்ஸ் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

இதுவரை அண்ட்ரோய்ட் பயனர்களுக்குக் கிடைத்து வந்த 'ஒரே கைபேசியில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தும் வசதி' இப்போது ஐபோன் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை அனுப்பும் முன்னரே அவற்றைச் செம்மைப்படுத்த 'மெட்டா ஏஐ' (Meta AI) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் புகைப்படத்தின் பின்னணியை மாற்றுவதற்கோ அல்லது தேவையற்ற பகுதிகளை அகற்றுவதற்கோ முடியும். எனினும், இந்த வசதி தற்சமயம் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All