
admin
May 21, 2026
தொழில்நுட்பம்
உலகை மாற்ற வரும் கூகுளின் புதிய கருவிகள்

உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்காகப் பல்வேறு பணிகளைத் தானாகவே முன்வந்து செய்யக்கூடிய ஒரு தனித்துவமான ஏஐ தனிநபர் உதவியாளர் (AI Assistant) உட்பட, பல புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அறிமுகப்படுத்த கூகுள் நிறுவனம் தயாராகி வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான கூகுள் ஐ/ஓ (Google I/O) நிகழ்வில், இம்முறை தொழில்நுட்பத் துறையின் தற்போதைய வளர்ந்து வரும் அலையான "ஏஜென்டிக் ஏஐ" (Agentic AI - பயனருக்காகச் சுயாதீனமாகச் செயல்படக்கூடிய ஏஐ) என்பதன் மீதே முதன்மைக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'ஜெமினி ஸ்பார்க்' (Gemini Spark) என்ற புதிய ஏஐ உதவியாளர் (AI Agent), இந்த மாநாட்டின் மிக முக்கியமான தயாரிப்பாகக் கவனத்தை ஈர்த்துள்ளது.
"நாங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக எங்களது ஏஜென்டிக் ஜெமினி (Agentic Gemini) யுகத்திற்குள் கால் பதித்துள்ளோம்," என்று கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 400 மில்லியனாக இருந்த ஜெமினி செயலியின் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் (Monthly Active Users) எண்ணிக்கை, தற்போது 900 மில்லியனைத் தாண்டியுள்ளது என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
கூகுள் நிறுவனம் தனது புதிய ஏஐ மாடல் வரிசையான ஜெமினி 3.5-ஐ உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்களுக்கு வெளியிடத் தொடங்கியுள்ளது.
இதன் முதல் கட்டமாக 'ஜெமினி 3.5 பிளாஷ்' (Gemini 3.5 Flash) மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மிக அதிவேகமாகச் செயல்படுவதற்கும், கோடிங் (Coding) பணிகளுக்காகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மற்ற போட்டி மாடல்களை விட நான்கு மடங்கு வேகமானது என்று கூறப்படுகிறது.
இது தவிர, வீடியோ உருவாக்கத்திற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஜெமினி ஆம்னி' (Gemini Omni) என்ற புதிய மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உரை (Text), படங்கள் (Images) அல்லது ஆடியோ (Audio) மூலம் கட்டளைகளை வழங்குவதன் மூலம் புவியீர்ப்பு மற்றும் இயக்கவியல் போன்ற இயற்பியல் விதிகளுக்குட்பட்ட, மிகவும் யதார்த்தமான உயர்தர வீடியோக்களை உருவாக்க முடியும்.
இந்த வீடியோக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, இதில் 'சிந்த்ஐடி' (SynthID) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டல் வாட்டர்மார்க் (Digital Watermark) தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜெமினி 3.5 தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் 'ஜெமினி ஸ்பார்க்' உதவியாளர், உங்களுக்காக மின்னஞ்சல்களைப் (Emails) பரிசோதித்தல், கூட்டக் குறிப்புகளை (Meeting notes) வகைப்படுத்துதல் மற்றும் தினசரி பணிகளைப் பட்டியலிடுதல் போன்ற சாதாரண வேலைகளைத் தானாகவே செய்யக்கூடியது.
இது கிளவுட் (Cloud) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால், உங்கள் கணினி அணைக்கப்பட்டிருந்தாலும் பின்னணியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும். இருப்பினும், பணப் பரிவர்த்தனைகள் அல்லது மின்னஞ்சல்களை அனுப்புதல் போன்ற முக்கியமான பணிகளைச் செய்வதற்கு முன், இது பயனரிடம் அனுமதி கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூகுள் தேடுபொறி வரலாற்றில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்படும் மிகப்பெரிய தழுவலாக, ஒரு புதிய "இன்டெலிஜென்ட் சர்ச் பாக்ஸ்" (Intelligent Search Box) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் வழமையான ஒன்று அல்லது இரண்டு சொற்களுக்குப் பதிலாக, மிக நீண்ட கேள்விகளைக் கூட உள்ளிட முடியும் என்பதுடன், ஏஐ மூலம் அதற்குப் பொருத்தமான பரிந்துரைகளும் வழங்கப்படும். மேலும் படங்கள், வீடியோக்கள் மற்றும் குரோம் டேப்களைக் (Chrome tabs) கூட தேடலுக்கான உள்ளீடுகளாகப் பயன்படுத்தலாம்.
இவற்றுடன், 'யுனிவர்சல் கார்ட்' (Universal Cart) என்ற புத்திசாலித்தனமான ஷாப்பிங் கருவியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் கூகுள், யூடியூப் அல்லது ஜிமெயில் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது பார்க்கும் பொருட்களை இந்த ஒரே கார்டில் சேர்க்க முடியும். மேலும், அந்தப் பொருட்களின் விலை குறைப்புக்கள் மற்றும் சசுகைகள் குறித்து இந்த ஏஐ கருவி உங்களுக்குத் தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருக்கும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





