Search

Rebecca

Jan 23, 2026

விளையாட்டு

இலங்கை அணிக்கு வெற்றி!

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இறுதி நேரத்தில் துடுப்பாட களம் புகுந்த துனித் வெல்லாலகே அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

272 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் இரண்டாவது விக்கெட்டுக்காக வந்த வீரர்கள் பெரும் நெருக்கடியை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கினர்.

டீநn னுரஉமநவவ 62 ஓட்டங்களையும், ஜோ ரூட் 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

எனினும் இலங்கை அணியினரின் தொடர்ச்சியான சிறப்பான பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் படிப்படியாக சரிய ஆரம்பித்தன.

கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணியின் துயஅநை ழுஎநசவழn அதிரடியாக துடுப்பாடினார்.

இறுதியில் இங்கிலாந்து அணியினால் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதன்மூலம் இலங்கை அணி இந்த தொடரில் 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All