
janani
May 5, 2026
அரசியல்
தமிழக எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின்!

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெரும் சாதனையைப் பதிவு செய்துள்ளது. 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.
எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே, ஆட்சியை மீண்டும் பிடிப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமைய உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





