Search

Oct 12, 2025

விளையாட்டு

மகளிர் உலகக் கிண்ணம்: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை.

13வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந் தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப் போட்டியில் நாணயற்சுழற்சியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All