Search

Oct 28, 2025

விளையாட்டு

பேட் கமின்ஸ் இன்றி முதல் டெஸ்டில் களமிறங்கும் அவுஸ்திரேலியா.

இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பேட் கமின்ஸ் உடற்றகுதியைப் பெற மாட்டார் எனவும் அதற்கு மாறாக அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித் பிரதியிடப்படுவாரென கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கமின்ஸ் மீள ஓட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியாவின் பயிற்சியாளர் அன்றூ மக்டொனால்ட், இரண்டாவது டெஸ்டுக்கு திரும்புவாரென நம்புவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், அணியில் கமின்ஸை ஸ்கொட் போலண்ட் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மிற்செல் மாஷை டெஸ்டுக்கு மீள அழைப்பது குறித்து தேர்வாளர்கள் கருத்திற் கொள்வரென மக்டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All