Search

Oct 11, 2025

விளையாட்டு

தன்னுடைய அனுமதியின்றி ஆசியகிண்ணத்தை வழங்கக் கூடாது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி, தன்னுடைய அனுமதியின்றி ஆசியகிண்ணத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9ஆவது முறையாக ஆசியக்கிண்ணத்தை வென்றது.

மேலும், இந்திய அணி வீரர்கள் ஆசியக்கிண்ணத்தை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து பெற மறுத்ததையடுத்து, கிண்ணத்தை ஆசியக்கிண்ண நிர்வாகமே எடுத்துச் சென்றது.

இந் நிலையில், தன்னுடைய அனுமதியின்றி ஆசியக்கிண்ணத்தை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All