Search

Oct 28, 2025

விளையாட்டு

தெற்காசிய சாம்பியன்ஷிப் வெற்றியுடன் இலங்கை தடகள அணிக்கு - உற்சாக வரவேற்பு.

இந்தியாவில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இலங்கை தடகள அணி இந்தியாவின் சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் இன்று அதிகாலை 2:10 மணிக்கு BIA பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தனர்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 16 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றதுடன் மொத்தம் 40 பதக்கங்களை வென்றுள்ளது.

இவ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அக்டோபர் 24 முதல் 26 வரை இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றது, இதில் தெற்காசிய பிராந்தியம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, முப்படைகளின் விளையாட்டுப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் இலங்கை விளையாட்டு வீரர்களை வரவேற்க கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All