Oct 27, 2025
தொழில்நுட்பம்
WhatsApp - Facebook இணைக்கும் முயற்சியில் மெட்டா நிறுவனம்.
WhatsApp மற்றும் Facebook சுயவிவரங்களை ஒன்றாக இணைக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் சோதனை செய்து வருகிறது.
இந்த வசதி, சமூக ஊடக இணைப்பை எளிதாக்கும் ஒரு முயற்சியாகும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Android மற்றும் iOS பீட்டா பதிப்புகளில் இவ் புதிய வசதியானது அறிமுகமாகும் இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் Facebook லிங்கை WhatsApp சுயவிவரத்தில் சேர்க்கலாம்.
தனியுரிமைக் கட்டுப்பாட்டுடன் (Privacy Control) வரும் இந்த வசதி விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.
தங்கள் Facebook லிங்கை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைப் பயனர்களே தேர்வு செய்துகொள்ள முடியும். இந்த அம்சத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் பயனரின் விருப்பம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
பயனர்கள் தங்கள் Facebook லிங்கை உறுதிப்படுத்தாமல் வைத்திருக்கலாம் அல்லது மெட்டாவின் அக்கவுன்ட்ஸ் சென்டர் மூலம் அதனை உறுதி செய்யலாம்.
இந்த அம்சம் விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







