Search

Rebecca

Nov 6, 2025

விளையாட்டு

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம்

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பாண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இவருக்கு இங்கிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்டதால், அணியில் இடம் கிடைத்துள்ளதுடன் உப தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆகாஷ் தீப்பும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம்:-

சுப்மன் கில் (தலைவர்), ரிஷப் பாண்ட் (உப தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, அக்சர் படேல், மொஹமட் சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All