Rebecca
Nov 5, 2025
தொழில்நுட்பம்
ஜேர்மன் ஹொட்டல் ஒன்றின் புதிய முயற்சி
கார் விரும்பிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில், தங்கள் ஹொட்டலில் தங்குபவர்கள் காருக்குள் தூங்க வழிவகை செய்துள்ளது ஜேர்மன் ஹொட்டல் ஒன்று.
உலகம் முழுவதுமே, ஆண் பெண், பெரியோர் சிறியோர் என்ற வித்தியாசமே இல்லாமல் கார்களைக் காதலிக்கும் ஒரு கூட்டம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அப்படி கார்களைக் காதலிப்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஜேர்மனியின் ளுவரவவபயசவஇல் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்று முன்வைத்துள்ள திட்டம் உலகம் முழுவதிலுமுள்ள கார் விரும்பிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆம், The V8 Hotel என்னும் அந்த ஹொட்டலில் தங்குபவர்கள், தங்கள் கனவுக் கார்களில் தூங்கும்வகையில், கார்கள் படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அவ்வகையில், Cadillac, Jeep , BMW மற்றும் Mercedes வகை கார்கள் வரை படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஹொட்டலில் உள்ள 26 அறைகளிலும், கார் விரும்பிகள் விரும்பும் அனைத்து அம்சங்களுடன், கார்களே படுக்கையாகவும் அமைக்கப்பட்டுள்ளன என்பதால் இந்த ஹொட்டல் கார் விரும்பிகளை ஈர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.



Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







