Search

Nov 25, 2025

விளையாட்டு

உலகக் கோப்பை மகளிர் கபடி அணி - இந்தியா சாம்பியன்

டாக்காவில் நடந்த உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. 11 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றன.

லீக் போட்டிகளில் தாய்லாந்து, பங்களாதேஷ், ஜெர்மனி மற்றும் உகாண்டா அணிகளை வீழ்த்தியதுடன் அரையிறுதியில் ஈரான் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தாய்வான் அணிகள் மோதின. இதில் 35- 28 என்ற புள்ளிக்கணக்கில் தாய்வான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம் கபடி போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.

இதுவரை பெண்கள் உலக கோப்பை தொடர்களில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும், ஆசிய விளையாட்டுகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிபதக்கத்தையும், ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 5ஆவது முறை பட்டத்தையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All