Search

Rebecca

Nov 11, 2025

தொழில்நுட்பம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய பேட்டரி சேமிப்பு திட்டம் அறிமுகம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய பேட்டரி சேமிப்பு திட்டத்தை உருவாக்கும் முக்கிய முயற்சியில் ஜேர்மனி ஈடுபட்டுள்ளது.

LEAG Clean Power GmbH மற்றும் Fluence Energy GmbH ஆகிய நிறுவனங்கள் இணைந்து GigaBattery Jänschwalde 1000 என்ற பெயரில் இந்த திட்டத்தை Brandenburg மாநிலத்தில் அமைக்கின்றன.

இந்த திட்டம், 1 GW சக்தி மற்றும் 4 GWh சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும்.

Fluence நிறுவனத்தின் Smartstack தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் இந்த 4 மணி நேர சேமிப்பு அமைப்பு, சூரிய மற்றும் காற்று மூலம் மின்சாரம் கிடைக்காத நேரங்களில் மின்சாரத்தை நிலைப்படுத்தும் முக்கிய பங்காற்றும்.

LEAG நிறுவனம், GigawattFactory என்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜேர்மனியின் டுரளயவயைn ஆற்றல் பகுதியில் சூரிய, காற்று மற்றும் பேட்டரி சேமிப்பு மையங்களை ஒருங்கிணைக்கிறது.

“மாற்றம் அடையும் ஆற்றல் சூழலில், நிலையான மின்சாரம் வழங்கும் சவால்களை தீர்க்க இது ஒரு முக்கிய முயற்சி” என LEAG Group CEO Adi Roesch தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் “ஜேர்மனிக்கும் ஐரோப்பாவிற்கும் ஒரு மைல்கல்லாக” இருக்கும் என Fluence CEO கூறியுள்ளார்.

ஜேர்மன் அரசு, பசுமை ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்த பேட்டரி சேமிப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த திட்டம், நிலக்கரி அதிகம் உள்ள பகுதியில் அமைக்கப்படுவதால், பசுமை ஆற்றலுக்கான மாற்றத்தை வேகப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp