Search

Jino

Sep 21, 2025

உலகம்

"ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது எமது கடமை" – த.வெ.க தலைவர் விஜய் !

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று மதியம் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். பல லட்சம் தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய தலைவர் விஜய். இலங்கையின் ஈழம் பற்றிய தனது குரலை எழுப்பியுள்ளார்.

- தலைவர் விஜய் உரையாற்றுகையில்,

"நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், அவர்கள் இலங்கையில் இருந்தாலும் எந்த மூலையில் இருந்தாலும், தாய் பாசம் காட்டிய தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் எமது கடமை மீனவர்களுடைய உயிர் எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஈழத்தமிழர்களுடைய கனவுகளும், அவர்களுடைய வாழ்க்கையும் எமக்கு ரொம்ப முக்கியம்''

ஈழத்தமிழ்ர்களுக்காக நான் குரல் கொடுப்பேன், அவர்களோடே நான் நிற்பேன் என த.வெ.க தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.

அதன்பின், மாலை 5 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

- இதன்போது அவர் உரையாற்றுகையில்,

டெல்டா பகுதியில இருக்கற விவசாயிங்க ஒரு கொடுமைய அனுபவச்சிகிட்டு இருக்காங்க. அதுபற்றி புகார் ஒன்று வந்தது. அது என்னன்னா, இந்த மாவட்டத்துல இருக்கிற நெல் கொள்முதல் மையங்கள்ல ஒரு மூட்டைக்கு 10 ரூபா கொடுக்கறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபா கொமிஷன் வாங்கறாங்க. ஒரு டன்னுக்கு 1,000 ரூபா கொமிஷன். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்கனா, கடந்த நான்கரை வருடங்கள்ல இந்த டெல்டா பகுதி விவசாயிங்க கிட்ட இருந்து கொமிஷனா பல கோடி புடுங்கி இருக்காங்க.

இதை வேற யாராவது சொல்லி இருந்தாகூட நான் நம்பி இருக்க மாட்டேன். ஆனா, எங்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான். விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க.

கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க "தீர்வைத் தேடி தீர்வை நோக்கி போவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் லட்சியமே" எங்கள் தேர்தல் அறிக்கையில் இதை விளக்கமாக தெரிவிப்போம். இந்த பொய்யான தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்கவே மாட்டோம். எது நடப்பதற்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டுமே சொல்லுவோம், அதை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp