Search

Jino

Sep 20, 2025

உலகம்

வதந்திக்கு பதிலடி - மக்ரோன் தம்பதியர் சட்டப்போரில்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும், அவரது மனைவியும், அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸுக்கு எதிராக அவதூறு வழக்கொன்றை அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்களின் படி, பிரிஜிட் மக்ரோன் ஒரு காலத்தில் ஆண் எனவும், பின்னர் பாலின மாற்றம் செய்து பெண்ணாக மாறியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வதந்தி 2017ஆம் ஆண்டு முதல் பரப்பப்பட்டு, YouTube மற்றும் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்ட நிலையில், தற்போதைய வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

மக்ரோன் தம்பதியர், இந்த அவதூறான தகவல்களை மறுப்பதற்காக, மருத்துவ ஆவணங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர் என அவர்களது சட்டத்தரணி டாம் கிளேர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp