Search

Sep 18, 2025

விளையாட்டு

ஆசிய கிண்ணம் : இலங்கை - ஆப்கானிஸ்தான் இன்றைய ஆட்டம்.

இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண T20 போட்டி அபுதாபியில் இன்று (19) இரவு 8:00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குழு B இலங்கை முன்னிலை வகிப்பதுடன், ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றால்,இலங்கை அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடன் வெளியேறும். அப்போது, 4 புள்ளிகளுடன் இருக்கும் பங்களாதேஷ் இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதியாகும்.

மாறாக ஆப்கானிஸ்தான் இலங்கையை வீழ்த்தினால் அந்த அணியும் 4 புள்ளிகளைப் பெறும், அது புள்ளிப் பட்டியலை மிகவும் சிக்கலாக்கும்.

அப்போது, ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய மூன்று அணிகளுமே தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இந்த நிலையில், நெட் ரன் ரேட் (Net Run Rate) அடிப்படையிலேயே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் நிலை உருவாகும்.

எனவே இன்றைய போட்டி ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய மூன்று அணிகள் மிகவும் எதிர்ப்பார்க்கும் முக்கிய போட்டியாக அமைந்துள்ளது. எனவே இன்றைய போட்டி தொடர்பில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All