Search

Sep 18, 2025

விளையாட்டு

ஆசியக் கிண்ணம் - சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி.

ஐக்கிய அரபு அமீரக டுபாயில் நேற்று புதன்கிழமை (17) நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்துடனான குழு A போட்டியில் பாகிஸ்தான் வெற்றது.

போட்டியில் வென்றதை தொடர்ந்து சுப்பர் - 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தெரிவாகியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி,

- பக்கர் ஸமன் 50 (36), ஷகீன் ஷா அஃப்ரிடியின் ஆட்டமிழக்காத 29 (14) ஓட்டங்கள் பெற்றனர். 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

- ஐ.அ. அமீரக அணியின் பந்துவீச்சு சார்பில், ஜுனைட் சித்திக் 4, துருவ் பரஷார், சிம்ரஞ்சித் சிங்கிடம் 3 ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 147 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி,

- 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே பெற்று 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ராகுல் சோப்ரா 35 (35) ஓட்டங்களைப் பெற்றார்.

- பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஷகீன் ஷா அஃப்ரிடி, அப்ரார் அஹ்மட், சைம் அயூப், ஹரிஸ் றாப், ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

மேலும், இப்போட்டியின் நாயகனாக ஷகீன் ஷா அஃப்ரிடி தெரிவாகியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All