Search

Aug 27, 2025

விளையாட்டு

16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர் "ரியோ குமோகா".

இங்கிலாந்தில் கால் பந்து பிரீமியர் லீக்கில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று காலை நடைபெற்ற போட்டியில் லிவர்பூல் கால் பந்து அணியும் நியூகேஸ்டல் அணியும் மோதின.

இப் போட்டியில், லிவர்பூல் கால்பந்து அணி வீரர் "ரியோ குமோகா" தனது 16 வயதிலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

பிரீமியர் லீக்கில் குறைந்த வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் 35,46-ஆவது நிமிடங்களில் லிவர்பூல் அணியினர் கோல் அடிக்க, இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த நியூகேஸ்டல் அணியினர் 57,88-ஆவது நிமிடங்களில் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினர்.

பின்னர், 96-ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக வந்த 16 வயதேயான லிவர்பூல் வீரர் "ரியோ குமோகா" 100-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All