Search

Sep 20, 2025

விளையாட்டு

சூப்பர் 4 சுற்று இன்று ஆரம்பம் : இலங்கை - பங்களாதேஷ் களம்.

ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான முதல் போட்டி இன்று (20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ளது. செப்டம்பர் 23 அன்று அபுதாபியில் பாகிஸ்தானுடனும், செப்டம்பர் 26 அன்று துபாயில் இந்தியாவுடனும் இலங்கை அணி மோதவுள்ளது.

மேலும், இவ் சூப்பர் 4 சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All