Search

Sep 19, 2025

விளையாட்டு

ஆசியக் கிண்ணம் - சூப்பர் 4 சுற்றில் மோதும் அணிகள்.

17 வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) இந்திய அணி ஓமன் அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது.

லீக் சுற்று முடிவடைவதற்கு முன்பாகவே சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குழு "A" பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. குழு "B" பிரிவில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நான்கு அணிகளும் தற்போது சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 20) சூப்பர் 4 சுற்று ஆரம்பிக்கிறது. முதல் போட்டியில் "B" குழுவில் தகுதி பெற்றுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21 ) இடம்பெறும் இரண்டாவது போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All