Search

Aug 15, 2025

விளையாட்டு

ஆசிய கிண்ண தொடர் - 19ம் திகதி இந்திய அணி அறிவிப்பு!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் திகதி முதல் 28ம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

டி20 வடிவில் நடைபெறும் இத் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரு பிரிவிலும் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 28ஆம்திகதி இறுதிச்சுற்றில் மோதும்.

இவ் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் 19ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது. மும்பையில் தெரிவு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தெரிவு குழுவினர் அணியை தெரிவு செய்ய உள்ளனர்.

இதில் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All