Search

Sep 16, 2025

விளையாட்டு

ஹொங்கொங்கை வீழ்த்தியது இலங்கை.

ஆசிய கிண்ணத்தின் நேற்றைய (15) போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஹொங்கொங் அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,

- Nizakat Khan ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில்,

- துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

150 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,

- பெத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

- வனிந்து ஹசரங்க 9 பந்துகளில் 2 நான்கு, ஒரு 6 ஓட்டங்கள் அடங்கலாக 20 ஓட்டங்களை அதிரடியாக பெற்று அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.

இலங்கை அணியின் இவ் வெற்றியின் மூலம் சுப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All