Search

Sep 18, 2025

விளையாட்டு

ஆசியக் கிண்ணம்: சூப்பர் 4 சுற்றில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்.

ஆசியக் கிண்ண தொடரில், நேற்றைய தினம் நடைப்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதற்கமைய, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவுள்ளன. இந்த பரபரப்பான,விறுவிறுப்பான போட்டி எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற இருக்கிறது.

குழு ஏ பிரிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

மேலும், இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை வெள்ளிக்கிழமை 19 ஓமனுடன் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All