
janani
Jun 18, 2026
உள்ளூர்
டெங்கு பரவலுக்கு காரணமான பிரதான நுளம்பு அடையாளம் !

இலங்கையில் டெங்கு பரவலுக்கு ஏடிஸ் ஈஜிப்டை மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகிய நுளம்புகள் முக்கிய காரணம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதில், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பு மிகுந்த ஆபத்தானது.
பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி இது குறித்து விளக்குகையில், 'ஏடிஸ் ஈஜிப்டை நுளம்புகள் குறுகிய காலத்தில் பல நபர்களிடம் மாறி மாறி இரத்தம் உறிஞ்சும் தன்மையைக் கொண்டவை. இதனால் வைரஸ் பரவும் வேகம் பலமடங்கு அதிகரிக்கிறது' என எச்சரித்துள்ளார். டெங்கு தொற்று அதிகரிக்கும் காலப்பகுதிக்கு முன்பே இந்த நுளம்புகள் பெருகுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





