Search

admin

Jan 31, 2026

விளையாட்டு

T-20 உலகக்கிண்ணம்: ஸ்மித், பெட் கம்மின்ஸ் வெளியேற்றம்

எதிர்வரும் டி20 உலகக்கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து சிரேஷ்ட வீரர்களான பெட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

பெட் கம்மின்ஸின் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தைக் கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலிய தெரிவுக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. அவருக்குப் பதிலாக பென் துவார்ஷுயிஸ் (Ben Dwarshuis) 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதேபோல், நடந்து முடிந்த பிக் பேஷ் லீக் தொடரில் அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்திற்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. அத்தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஸ்மித், ஒரு சதம் மற்றும் இரண்டு அரைச்சதங்களுடன் 299 ஓட்டங்களை குவித்திருந்தார். குறிப்பாக அவரது ஓட்ட வேகம் 167.97 ஆக இருந்த போதிலும், அவர் அணியில் சேர்க்கப்படாமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கு மேலதிகமாக, மெத்யூ ஷார்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மெட் ரென்ஷோ சேர்க்கப்பட்டுள்ளார். 

மிட்செல் மார்ஷ் (தலைவர்) சேவியர் பார்ட்லெட் கூப்பர் கொனோலி டிம் டேவிட் பென் துவார்ஷுயிஸ் கெமரூன் கிரீன் நாதன் எல்லிஸ் ஜொஷ் ஹேசில்வுட் டிராவிஸ் ஹெட் ஜொஷ் இங்கிலிஸ் மெட் குஹ்னெமன் கிளென் மெக்ஸ்வெல் மெட் ரென்ஷோ மார்கஸ் ஸ்டோயினிஸ் ஏடம் சம்பா

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All