Search

Rebecca

Jan 29, 2026

விளையாட்டு

புதிய மின் விளக்குகளுடன் ஒளிர ஆரம்பித்துள்ள SSC

கொழும்பு SSC மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்விளக்கு கட்டமைப்பு நேற்று மாலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதற்கமைய நாட்டிலுள்ள சர்வதேச கிரிக்கட் மைதானங்களில் மின்விளக்கு கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட ஐந்தாவது மைதானம் இதுவாகும்.

இதுவரையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம், பல்லேகலை, சூரியவெள மற்றும் ரங்கிரி தம்புள்ளை ஆகிய மைதானங்களில் குறித்த மின் விளக்கு கட்டமைப்பு காணப்பட்டது.

மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளியமைப்பு LED தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 6 தூண்களைக் கொண்டதாக உள்ளது.

இதேவேளை பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாகும் வகையில் பல வண்ணங்களைக் கொண்டதாக மின் விளக்குகள் ஒளிரும் வகையிலும் கட்டமைப்பு அமையப்பெற்றுள்ளதுடன் LED மின் விளக்குகளைக் கொண்டு உருவங்களை உருவாக்கும் நுட்பமும் அதில் அடங்கியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All