Search

Rebecca

Jan 11, 2026

விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான்: தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று!

இலங்கை மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று (11) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

மழை காரணமாக இரண்டாவது போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், மழை காரணமாகக் கைவிடப்பட்ட இரண்டாவது T-20 போட்டிக்காக நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்த ரசிகர்கள், இன்றைய (11) மூன்றாவது போட்டியை இலவசமாகப் பார்ப்பதற்கான வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All