
Rebecca
Jan 26, 2026
விளையாட்டு
இலங்கையின் மேசைப்பந்து வீரரான டாவி சமரவீர நாட்டிற்கு வருகை

உலகில் 11 வயதுக்குட்பட்டோருக்கான தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள இலங்கையின் மேசைப்பந்து வீரரான டாவி சமரவீர, பஹ்ரைன் மற்றும் கட்டாரில் நடைபெற்ற உலக தரவரிசைப் போட்டிகளில் மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தார்.
ஜனவரி 14 முதல் 18 வரை பஹ்ரைனில் நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து தரவரிசைப் போட்டியில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதேபோல், ஜனவரி 19 முதல் 25 வரை கட்டாரின் டோஹாவில் நடைபெற்ற உலக கனிஷ்ட மேசைப்பந்து போட்டியில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று மற்றுமொரு தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றார்.
டாவி சமரவீர கொழும்பு சென் தோமஸ் கல்லூரியில் தரம் 6இல் கல்வி பயிலும் 10 வயது மாணவனாவார். இவரது பயிற்சியாளர் தந்தை ஹசித சமரவீர ஆவார்.
இவர்கள் ஓமானின் மஸ்கட்டில் இருந்து சலாம் எயார் (Salam Air) நிறுவனத்திற்கு சொந்தமான OV-437 விமானம் மூலம் இன்று அதிகாலை 03.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இவர்களை அன்புடன் வரவேற்றதுடன், டாவி சமரவீரவின் தாய், சகோதரன் மற்றும் இலங்கை மேசைப்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் தயா சமரவீர ஆகியோரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






