Search

Dec 23, 2025

விளையாட்டு

ஃபிபா தரவரிசையில் ஸ்பெயின் முதல் இடம்

2025 ஆம் ஆண்டு முடிவை முன்னிட்டு, ஆடவர் கால்பந்து அணிகளுக்கான சமீபத்திய தரவரிசைப் பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 1877.18 புள்ளிகளுடன் ஸ்பெயின் அணி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

அர்ஜென்டினா (1873.33) புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பிரான்ஸ் (1870) மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46), போர்ச்சுகல் (1760.38), நெதர்லாந்து (1756.27), பெல்ஜியம் (1730.71), ஜெர்மனி (1724.15) மற்றும் குரோஷியா (1716.88) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10 ஆம் இடங்கள் வரை இடம்பிடித்துள்ளன.

இதனிடையே, அடுத்த ஃபிபா தரவரிசைப் பட்டியல் வரும் ஜனவரி 19 ஆம் திகதி வெளியிடப்படும் என ஃபிபா தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All