
janani
May 8, 2026
விளையாட்டு
இந்திய அணியில் புதிய மாற்றம்? சூர்யகுமார் பதவி நீக்கப்படுகிறாரா?

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணிக்கு வென்று கொடுத்த போதிலும், சூர்யகுமார் யாதவை தலைவர் பதவியிலிருந்து நீக்க BCCI தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.
அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை புதிய தலைவராக நியமிக்க அஜித் அகர்கர் தலைமையிலான தெரிவுக்குழு அவதானம் செலுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்திய விதம் தெரிவுக்குழுவை வெகுவாகக் கவர்ந்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.
அத்துடன், ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களின் போது இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் சபை திட்டமிட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





