Search

janani

May 5, 2026

அரசியல்

தேர்தல் தோல்விக்குப் பிறகு பதவி விலகினார் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் பதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததால் அவர் எம்.எல்.ஏ. வாய்ப்பையும் இழந்துள்ளார்.

முன்னதாக, தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All