Search

janani

Mar 20, 2026

உள்ளூர்

மத்திய கிழக்கு விவகாரம் : இலங்கை நடுநிலைமையில் மாற்றம் இல்லை

மத்திய கிழக்கு விவகாரத்தில் இலங்கையின் நடுநிலைமையில் மாற்றமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள மத்திய கிழக்கு போர் விவகாரத்தில், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் நடுநிலைத் தன்மை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி "இந்த விவகாரத்தில் எம்முடைய நாட்டின் நிலைப்பாடு எப்போதும் நடுநிலை வகிப்பதாகும். இந்த நடுநிலைத் தன்மையைப் பாதுகாப்பதே எமது நாட்டின் சர்வதேச கௌரவத்தை உறுதிப்படுத்தும்" எனத் தெரிவித்தார்.

எந்தவொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் அல்லது சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும், இலங்கை தனது மத்தியஸ்த நிலையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All