Search

admin

May 1, 2026

உள்ளூர்

வானிலை முன்னறிவிப்பு


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதிகாலை வேளையில் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All