Search

admin

Apr 14, 2026

விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றை மாற்றியமைத்த ஹைதராபாத் வீரர்கள்


நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாமல் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வெற்றிப் பயணத்திற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சாகிப் ஹுசைன் மற்றும் பிரபுல் ஹிங்கே ஆகியோரின் அபார பந்துவீச்சால் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைக் குவித்தது.

217 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு, சன்ரைசர்ஸின் அறிமுகப் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தனர்.

ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All